தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் தொடர்பான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது கோடை விடுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனால் தேர்தல் பணிக்கு ஏதுவாக ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் தேர்தல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. எனவே, ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி அன்று ரமலான் பண்டிகை வர உள்ளதால் ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதி நடக்க இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் முறையே ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதி நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால், ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த கோடை விடுமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் ஏப்ரல் 22, 23ஆம் தேதி பள்ளிக்கு வரவேண்டிய சூழல் உள்ளதால், கோடை கால விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த மக்கள், தற்போது பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு பிறகு தான் கோடை விடுமுறையில் சுற்றுலா அல்லது சொந்த ஊர்களுக்கு செல்லும் திட்டங்களை மக்கள் செயல்படுத்த வேண்டியுள்ளது.
Read More : Lok Sabha | திடீரென மேடையிலேயே கண்ணீர் விட்டு கதறிய பிரேமலதா..!! என்ன காரணம்..?