வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழை முடியும் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசுவதால், மாணவர்கள் தொழிநுட்ப சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More : குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டில் கனமழை வெளுத்து வாங்கும்..!! வானிலை மையம் வார்னிங்..!!