சண்டிகர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் இன்று குரு தேக் பகதூர் விழா நடைபெறுகிறது. இதையொட்டி இன்று சண்டிகர் மாநிலத்தில் விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், இனிவரும் காலங்களில் சண்டிகர் மாநிலம் முழுவதும் இன்றைய தினம் பொது விடுமுறை விடப்படும் என்றும் அறிவித்துள்ளது.
2022ல் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் சண்டிகர் யூனியன் பிரதேச விடுமுறை குறித்து டிசம்பர் 15, 2021ல் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் நிர்வாகம் ஒரு பகுதி மாற்றத்தை செய்துள்ளது. எனவே, இன்றைய தினத்தை குரு தேக் பகதூர் தியாகி தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அனைத்து நிறுவனங்களிலும் குரு தேக் பகதூர் நினைவு தினமாக இன்றைய தினம் அனுசரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.