டிசம்பர் 4ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு. ஏற்கனவே திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டஙக்ளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 4வது மாவட்டமாக சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நாடவடிக்கை காரணமாக , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை பொறுத்து, டிசம்பர் 5ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.