இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழக தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செப்.11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்.21ஆம் தேதி 4 தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். அடுத்தக்கட்டமாக ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : ’பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து சித்ரவதை’..!! ’பாலியல் அடிமையாக இருந்தேன்’..!! தமிழ் இயக்குனர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு..!!