fbpx

கனமழை…! இந்த 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…! ஆட்சியர்கள் உத்தரவு….!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை காரணமாக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள்‌ மட்டும் விடுமுறை வழங்கிய மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு எந்த ஒரு விடுமுறையும் கிடையாது வழக்கம் போல அனைவரும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும்.

Vignesh

Next Post

சோகம்..! பிரபல நடிகரின் மனைவி திடீர் உயிரிழப்பு...! இது தான் காரணம்...? மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்...!

Tue Nov 1 , 2022
மறைந்த கன்னடம், தெலுங்கு, தமிழ் நடிகர் கல்யாண் குமாரின் மகன் பரத் கல்யாண் சினிமாவில் நடிகராக அறிமுகமானாலும், அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிகராக மிகவும் பிரபலமானார். தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபூர்வ ராகங்கள், வம்சம் மற்றும் ‘ஜமிலா’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி வயது 43, சில வாரங்களாக கோமா நிலையில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். […]

You May Like