fbpx

பள்ளிகளுக்கு விடுமுறை..! ’யாரும் அறிக்கை வெளியிடாதீங்க’..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்ட நிலையை அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப்
சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை..! ’யாரும் அறிக்கை வெளியிடாதீங்க’..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சென்னை மேயர் பிரியா, “மாணவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசிரியரும் ரோல் மாடலாக இருப்பார். சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி வழங்குகிறோம் என்ற நோக்கில் இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிட்டுள்ளோம். தலைமை பொறுப்பு, முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் வளர்க்க
பள்ளிகளில் மாணவர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் எண்ணங்களை வண்ணம் ஆக்கும் வகையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிறந்த திட்டங்கள் கொண்டு வரப்படும்” என்றார்.

பள்ளிகளுக்கு விடுமுறை..! ’யாரும் அறிக்கை வெளியிடாதீங்க’..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

அதனைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். 3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும். குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு தான் நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை. மேலும், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்ற நிலையை உருவாக்க வேண்டாம்” என்றார்.

Chella

Next Post

வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன்பலி…

Tue Sep 20 , 2022
ஈரோடு மாவட்டத்தில்  வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட அஸ்திவாரக் குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் . இவருக்கு புஷ்பராஜ் (13), அபினேஷ் (6) என்ற இரு மகன்கள் ஹர்த்திகா (3) என்று மகளும் உள்ளனர். அபினேஷ் என்ற சிறுவன் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வழக்கம் போல […]

You May Like