fbpx

பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை…! பள்ளி கல்வித்துறை உத்தரவு..

புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் கல்லறை திருநாள் நாளை (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக இந்த நாளுக்கு கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பது வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு கல்லறை திருநாளுக்கும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள சுற்றறிக்கையில், புதுவை விடுதலை நாள் மற்றும், கல்லறை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி விடுதலை நாள் மற்றும், கல்லறை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி!… 2வது இடத்தில் தமிழக வீராங்கனை வைஷாலி!

Wed Nov 1 , 2023
ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செய்ஸ் போட்டியின் 6வது சுற்றில் ரஷ்யா வீராங்கனை கோரியாச்கினாவுடன் டிரா செய்து தமிழக வீராங்கனை வைஷாலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். பிரிட்டனின் ஐல் ஆப் மேனில், ‘கிராண்ட் சுவிஸ் ஓபன்’ செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜுன், அமெரிக்காவின் ஆரோனியன், பேபியானோ காருணா உள்ளிட்ட 114 பேர் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் மொத்தம் 11 சுற்றுகள் நடைபெறுகின்றன. பெண்கள் பிரிவு 4வது […]

You May Like