fbpx

’இனி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை’..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்று நவம்பர் 15ஆம் தேதி கனமழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை 7 வகையான விதிமுறைகள பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, அதிகனமழை பெய்தால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும் . பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை முதலில் அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட வேண்டும். விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை..!! உடலுக்கு நன்மையா? தீமையா? உண்மை என்ன..?

Thu Nov 16 , 2023
டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.147 கோடிக்கு மது விற்பனை நடந்து வருகிறது. இதற்கிடையே, 500 சில்லரை மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டதன் காரணமாக மதுபான விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் கண்ணாடி […]

You May Like