fbpx

இளம் வயதில் ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் இயக்குனர் “வில்லியம் ஃபிரைட்கின்” காலமானார்..!

“தி பிரெஞ்ச் கனெக்ஷன்” படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற வில்லியம் ஃபிரைட்கின், லாஸ் ஏஞ்சல்ஸில் திங்கட்கிழமை காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 87 வயதான இயக்குனர் வில்லியம் ஃபிரைட்கின் நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 29, 1939 இல் சிகாகோவில் பிறந்த வில்லியம் ஃபிரைட்கின், இளம் வயதிலேயே உள்ளூர் தொலைக்காட்சி தயாரிப்புகளில் பணியாற்றத் தொடங்கினார். 16 வயதில், அவர் நேரடி நிகழ்ச்சிகளை இயக்கினார். அவர் 1962 இல் “தி பீப்பிள் வெர்சஸ் பால் க்ரம்ப்” என்ற திரைப்படத்தை உருவாக்கியதன் மூலம், நேரடி நிகழ்ச்சிகளில் இருந்து ஆவணப்படங்களுக்கு மாறினார். இது சிகாகோவில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது காவலாளியைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதியின் கதை. அதனை தொடர்ந்து அவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது. 1967 குட் டைம்ஸ் படத்தை இயக்கினார்.

$2 மில்லியனில் தயாரிக்கப்பட்ட தி பிரெஞ்ச் கனெக்ஷன் திரைப்படம், 1971 இல் வெளியானபோது பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது. இது சிறந்த படம், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பிற்கான அகாடமி விருதுகளை வென்றது. பிறகு 1973 ல் வெளியான “தி எக்ஸார்சிஸ்ட்” திரைப்படம் பிளாக் பஸ்டர் அடித்தது. 12 வயது சிறுமியைப் பற்றிய சிறந்த விற்பனையான நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்த எக்ஸார்சிஸ்ட் திரைப்படம். இந்த ஹாரர் திரைப்படம் 10 அகாடமி விருது பரிந்துரைகளைப் பெற்றது. தி ஃபிரெஞ்ச் கனெக்ஷன் மற்றும் தி எக்ஸார்சிஸ்ட் ஆகிய இரண்டு படங்களின் நம்பமுடியாத வெற்றிக்குப் பிறகு , வெளிவந்த படங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வில்லியம் ஃபிரைட்கின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Kathir

Next Post

’உங்கள் ரேஷன் கார்டுக்கு வந்த புதிய ஆபத்து’..!! வெளியான முக்கிய அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Tue Aug 8 , 2023
தொடர்ந்து 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக எந்தவித பொருட்களும் வாங்கவில்லையெனில் ரேஷன் கார்டு ரத்தாக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது, ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசு ரேஷன் கார்டுகளை ரத்து செய்து வருகிறது. இந்நிலையில், கேரளா அரசு Operation Yellow […]

You May Like