தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹாலிவுட் திரை பிரபலங்களை களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமௌலியின் திரைப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ராம்சரண் , ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கினார். இந்தப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதுமட்டும் இன்றி ஹாலிவுட் திரை உலகில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மகேஷ்பாவுவை வைத்து படத்தை இயக்குகின்றார். இந்த படத்தில் தோர் என்ற ஆங்கிலப்படத்தில் நடித்த கதாநாயகனை இந்தப் படத்தில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகேஷ்பாபுவுடன் சர்க்காருவாரிப்பட்டா என்ற திரைப்படம் போதிய அளவில் கைகொடுக்கவில்லை. அடுத்த திரைப்படம் மாஸாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த திரைப்படம் இண்டியானா ஜோன்ஸ் திரைப்பட பாணியில் இருக்கும் என ஏற்கனவே இத்திரைப்படம் பற்றிய சில குறிப்புகளை மேடையில் பேசி இருக்கின்றார். இந்நிலையில் ஹாலிவுட் ஏஜென்சியான சி.ஏ.ஏ.வுடன் கையெழுத்தும் ஆகியுள்ளது. எனவேஇது ஒரு அகில உலக திரைப்படமாக இருக்கும். முதல் முதலில் பான்-இந்திய திரைப்படம் இயக்குபவர் ராஜமௌலி என்ப குறிப்பிடத்தக்கது.