ஜனவரி 19ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உதாரணமாக கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க 19ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், இந்த பயணம் முழுக்க முழுக்க அயோத்தி விழாவை மனத்தில் வைத்து பிளான் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 20ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அங்கே சிறப்பு பிரசாதம் அவர் வாங்கி வைப்பார். பின்னர், ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, புனித நீராடி சாமி தரிசனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி புனிதநீரை எடுத்துச் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இராமாயணத்தில் ராமர்.,. ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலம் வழியாக இலங்கை சென்றதாக கதை உள்ளது.
இதனால் அங்கே உள்ள கடல் நீர் புனிதமாக கருதப்படுகிறது. அந்த கோவில் உள்ளே இருக்கும் தீர்த்தமும் மிகவும் புனிதமாக பார்க்கப்படுகிறது. இதைத்தான் அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி எடுத்து செல்ல இருக்கிறாராம். இதற்காகத்தான் அவர் தமிழ்நாட்டிற்கு வருகிறாராம்.