fbpx

நீங்கள் வங்கியில் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி இருக்கிறீர்களா…..? அப்படி என்றால் இதை நிச்சயம் படித்து பாருங்கள் உயரப்போகும் தவணைத் தொகை யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்……?

முன்பெல்லாம் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. அந்த எண்ணிக்கை இன்றளவும் குறைந்துவிடவில்லை. எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சாதாரண, சாமானிய மக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.

வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட நினைக்கும் நபர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாகவோ அல்லது பெரும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஏழை , எளிய மக்களுக்கு அரசு தரப்பில் நிதி ஒதுக்கி வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் என்று தெரிவித்து, அந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது.

ஆனால் என்னதான் அதிக அளவில் ஊதியம் வாங்கும் தைரியத்தில் வங்கியின் கடன் வாங்கி வீடு கட்டினாலும், அதன் பிறகு அவர்கள் அந்த வீட்டிற்க்காக சற்றேற குறைய 20 முதல் 30 ஆண்டுகள் வரையில் மாத தவணையை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். இதன் காரணமாக, அவர்கள் பெரும் சுமைக்கு ஆளாகலாம்.

இந்த சூழலில் தான் வீட்டுக் கடனுக்கான மாத தவணை ஏற்கனவே கடந்த மே மாதம் முதல் பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது பல வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கிறது. இதனால் அடுத்த மாதம் முதல் பல லட்சம் வீட்டுக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடனுக்கு அதிகப்படியான மாத தவணை தொகையை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிலும் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியுடன், பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் போன்ற வங்கிகளும் அனைத்து கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றும் விதத்தில், எம்.சி.எல்.ஆர் விகிதத்தை அதிகரித்திருக்கிறது. இந்த புதிய வட்டி விகிதம் சென்ற 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

இந்த எம் சி எல் ஆர் விகிதம் என்பது ஒரு வங்கியில் வழங்கப்படும் பல்வேறு கடன்களின் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதற்கான ஒரு அளவீடாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே, ஒவ்வொரு கடன் வகைகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் லாப அளவீடுகளை வைத்து வட்டி விதித்து ஒருவருடைய கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு, கடனுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தான், ஐசிஐசிஐ வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது, ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் ஒரு வருடத்திற்கான எம் சி எல் ஆர் விகிதம் 8.90% என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8.60% எனவும், பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 8.70% வரையிலும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல், ஐ சி ஐ சி ஐ வங்கி போன்ற வங்கிகளின் எம்.சி.எல்.ஆர் விகித அதிகரிப்பு, புதிதாக கடன் வாங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு, இது வீட்டுக் கடன், வாகன கடன், தனிப்பட்ட கடன் என்று அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் ரிசர்வ் வங்கியை பொறுத்தவரையில், அந்த வங்கி, ஜூன் மாதம் நடத்திய நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றத்தையும் செய்யாததால், தொடர்ந்து, 6.5% ரெப்போ வட்டி விகிதம் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை 2.5 சதவீதம் வரையில் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பொதுமக்கள் வாங்கிய கடனுக்கான தவணைத் தொகை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.

Next Post

மக்கள் மனதில் இடம் பிடித்த நம்பர் ஒன் ஹீரோ..!! யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!! லயோலா நடத்திய கருத்துக் கணிப்பு..!!

Fri Aug 4 , 2023
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே யார் நம்பர் ஒன், யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டி நடந்து வருகிறது. இதில் முன்னிலையில் இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் தான். பாக்ஸ் ஆபிஸில் யாருடைய படம் அதிக வசூல் பெறுகிறதோ அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஆளாளுக்கு பேசி இதை பூதாகரமாக ஆக்கியிருக்கிறார்கள். இந்நிலையில், சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மக்களிடம் அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் […]

You May Like