fbpx

வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயருகிறது..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரெப்போ ரேட் உயர்வால் வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் மீண்டும் ரெப்போ வட்டி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு ஏதும் இடம்பெறாது என பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவான எஸ்.பி.ஐ ரிசர்ச் தெரிவித்துள்ளது.

வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயருகிறது..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இதுகுறித்த அறிவிப்பில், ”நவம்பர் 3ஆம் தேதி தேதி நடைபெறும் கூட்டம் வழக்கமான கூட்டமாக இருக்கும். அதில், எந்த முடிவுகளும் அறிவிக்கப்படாது. டிசம்பர் மாத மத்தியில் ரெப்போ வட்டியை 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இறுதியாக 0.5 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த ரெப்போ ரேட் உயர்வால் வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

மோசடி சாமியாரை பொறிவைத்து பிடித்த பெண்கள்.! கையும், களவுமாக சிக்கிய தரமான சம்பவம்.!

Tue Nov 1 , 2022
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா. சத்தியபாமா சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஏரலை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபர் குறி சொல்வதாக கூறி அந்தப் பகுதிக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து சத்தியபாமா அவரிடம் குறி கேட்டுள்ளார். அந்த வாலிபர் உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் , அதற்கு […]

You May Like