fbpx

இந்தியாவில் வீட்டு கடன்கள் மட்டுமே இத்தனை லட்சம் கோடியா..? வெளியான அதிர்ச்சி விவரம்..!

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் வீட்டு கடன்கள் கடந்த ஆண்டை விட 14 சதவீதம் உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பங்களின் கிரெடிட் கார்டு கடன்கள் உயர்ந்தாலும் இன்னும் வீட்டுக் கடன்கள் பெரும் பகுதியில் இருக்கின்றன. அதன்படி, இந்தியாவில் குடும்பங்களின் மொத்த வீட்டு கடன்களின் மதிப்பு 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 17.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வீட்டு கடன்கள் மட்டுமே இத்தனை லட்சம் கோடியா..? வெளியான அதிர்ச்சி விவரம்..!

இது ஒரு பக்கம் இருக்க கிரெடிட் கார்டு கடன்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு கிரெடிட் கார்டு கடன்களின் மதிப்பு 1.3 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 1.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை நுகர்வோர் கடன்களின் எண்ணிக்கை 16.5 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழில்துறை பலன்களை பொறுத்தவரை கடன் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளதாகவும் நகைகள் மற்றும் ரத்தின கற்கள், தொலைத்தொடர்பு, பொறியியல் உள்ளிட்ட துறைகளின் கடன் வளர்ச்சி மந்தமாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது.

Chella

Next Post

இணையவழி குற்றங்களைத் தடுக்க குழு..இனி இணையதளத்தில் ’’நோ’’ சில்மிஷம்..மீறினால் கடும் நடவடிக்கை ….

Mon Sep 5 , 2022
இணையவழி குற்றங்களை கண்டுபிடித்து நடிவடிக்கை எடுக்க தனி குழு அமைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இணையதளங்களின் வாயிலாக பல்வேறு குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சமூக ஊடகங்களை கண்காணிக்கும் விதமாக சமூக ஊடகக் குழு அமைத்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை உள்பட 9 மாநகரங்களில் மற்றும் 37 மாவட்டங்களிலும் சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இணைய வழி பாலியல் குற்றங்கள் , போதைப் பொருள் […]

You May Like