fbpx

அமர்நாத் யாத்திரை….! பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரியுடன் உள்துறை அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை….!

ஜம்மு காஷ்மீரில் ஆரம்பமாகும் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையினும் இந்த பணி நிமித்தத்தை தரிசிக்க வேண்டும் என்று இந்து மக்கள் நினைப்பார்கள்.


அந்த அளவிற்கு புகழ் பெற்ற சிவாலயங்களில் நன்றாக இந்த அமர்நாத் குகை கோவில் இருக்கிறது. இந்த பாதயாத்திரைக்கு இந்த 62 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிறைவு பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான இணையதள முன்பதிவு சென்ற ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமானது.

இந்த நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்ற வருடம் 3.45 லட்சம் பக்தர்கள் இந்த பனிலிங்கத்தை தரிசித்த நிலையில், இந்த வருடம் 5 லட்சத்தை இந்த எண்ணிக்கையை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

Next Post

சென்னையில் பரபரப்பு தண்டவாளத்தை விட்டிறங்கிய எக்ஸ்பிரஸ் ரயில்…..! அதிஷ்டவசமாக தவிர்க்கப்பட்ட மாபெரும் விபத்து…..!

Fri Jun 9 , 2023
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்று கொண்டிருந்த போது, பேசின் பிரிட்ஜ் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. ஆகவே சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்களின் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ரயிலின் […]

You May Like