fbpx

மருந்தாகும் வீட்டு உணவுகள்..!! அல்சர் முதல் காமாலை வரை..!! நீங்களே ஈசியா செய்யலாம்..!!

உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு பெரும்பங்கு வகிக்கிறது. வீட்டில் இருக்கும் உணவுகளே நமக்கு மருந்துகளாக பயன் தருகின்றன. பத்தியமில்லாத அன்றாடம் கடைபிடிக்கக்கூடிய உணவு பழக்கங்களை பின்பற்றினாலே நோய் வராது. அதிகமாக சாப்பிட்டுவிட்டு செரிமான மாத்திரைகளை போடுவதைவிட ஒரு துண்டு நசுக்கிய இஞ்சி, புதினா சேர்த்து டீ போட்டு அருந்தினால் ஜீரணம் எளிதில் ஆவதுடன் நல்ல பசியும் எடுக்கும்.

உப்பு, புளி, பெருங்காயம், மிளகை தனித்தனியே சூடான வாணலியில் வறுத்து இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால், வாயு கோளாறு நீங்கிவிடும். அதேபோல் இளநரை பிரச்சனைக்கு பெரிய நெல்லிக்காய், கறிவேப்பிலை, கரும்புச்சாற்றில் ஊறவிட்டு அதனுடன் சீரகம், உப்பு கலந்து சட்னியாக அரைத்து சாப்பிட்டு வர இளநரை மறையும்.

பயத்தம்பருப்பை வேகவைத்து அதனுடன் சிறிது கசகசாவை பொடித்துப் போட்டுக் கடைசியில் தேங்காய்ப்பால் விட்டு பாயசம் போல் சாப்பிட்டு வந்தால், அல்சர் முழுமையாக சரியாகும். ரோஜா இதழ்களை நிழலில் காய வைத்து அதனுடன் ஏலக்காய், சுக்கு சேர்த்து பொடிக்கி வைத்துக் கொண்டு தினமும் இதை வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால், உடல் சூடு மட்டுமின்றி எடையும் குறையும்.

அத்திப்பழம், பேரீச்சம்பழம் சம அளவு எடுத்து அரைத்து பனை வெல்லத்தில் பாகு வைத்து அரைத்த விழுதை அதில் சேர்த்து ஜாம் போல செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை வரவே வராது. பெரிய நெல்லிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து நீர்விட்டு வடிகட்டவும். இதனை தேன் கலந்து ஜுஸாகக் குடித்து வந்தால், மூக்கடைப்பு விலகும். செர்ரிப் பழங்களை பொடியாக நறுக்கி மாதுளை சாற்றில் ஊறவைத்து, மாலையில் இத்துடன் 1 சிட்டிகை கசகசா பொடியைக் கலந்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். அரைநெல்லிக்காயுடன் உப்பு, 2 மிளகு, கால் தேக்கரண்டி சீரகம் வைத்து அரைத்து மோருடன் இதை கலந்து குடித்தால், காமாலை குணமாகும்.

Read More : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம்..!! காதலன் கண்முன்னே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

Grind half a gooseberry with salt, 2 peppercorns, and a quarter teaspoon of cumin seeds, mix it with buttermilk, and drink it to cure jaundice.

Chella

Next Post

வேகமா வெயிட் லாஸ் பண்ணனுமா..? அப்ப கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நல்ல ரிசல்ட் தெரியும்...

Wed Dec 25 , 2024
பிசியான வாழ்க்கை முறை, உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் வேலை செய்வது, மோசமான உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் கடுமையான டயட், உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், உங்கள் உணவில் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள சூப்பர்ஃபுட்ளை சேர்ப்பதால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் […]

You May Like