ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரே ஆசை, முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது தான். இந்த ஆசை பெரும்பாலும் பெண்களுக்கு இருந்தாலும், ஆண்களுக்கும் தங்களின் முகன்=ம் பொலிவாக இருக்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் பலருக்கு முகம் முழுவதும் பருக்கள் மற்றும் தழும்புகள் தான் அதிகம் உள்ளது.
குறிப்பாக ஆண்களுக்கு முகம் மட்டும் அதிக கருப்பாக இருக்கும். இந்த சோகத்தில், பல ஆயிரங்கள் செலவு செய்து கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்தி விடுகின்றனர். இதனால் ஏற்படும் நன்மையை விட பக்க விளைவுகள் தான் அதிகம். ஆம், கிரீம்களில் உள்ள கெமிக்கல் முகத்தின் இயற்க்கை பொலிவை கெடுத்து விடும். இதனால் முடிந்த வரை இயற்கையான பொருள்களை வைத்து முகத்தை பராமரிப்பது நல்லது.
அந்த வகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், சருமம் அதிகமாக பாதிக்கப்படும். தினமும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் என வெளியே செல்பவர்களுக்கு கட்டாயம் முகம் கருமையாக மாறிவிடும். இதனால் வசதி உள்ளவர்கள், அடிக்கடி பியூட்டி பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்து கொள்வார்கள். ஆனால் நடுத்தர மக்கள் முகத்தின் நிறம் மாறிவிட்டது என்று நினைத்து கவலைப் படுவதோடு நிறுத்தி விடுவார்கள்.
ஒரு சிலர், கிச்சனில் இருக்கும் பொருள்களை எல்லாம் முகத்தில் பூசிக் கொள்வார்கள். ஆனால் அந்த பொருள்கள் உண்மையாகவே முகத்தின் பழைய நிறத்தை கொடுக்குமா என்றால் கேள்விக் குறி தான். அந்த வகையில், முகத்தில் ஏற்படும் கருமையை போக்க மருத்துவர் ஷர்மிகா ஹோம்மேட் ஃபேஸ்பேக் தயாரிக்கும் முறை குறித்து கூறியுள்ளார்.
அதற்கு முதலில், பாசி பயிறு மாவு மற்றும் ஆரஞ்சு பழச் சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்கு கலந்து விட வேண்டும். இவை மூன்றும் பசை பதத்திற்கு வந்த உடன், இதனை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் வழக்கம் போல் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவலாம்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கருமை கட்டாயம் நீங்கி விடும் என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
Read more: செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்…! முழு விவரம் இதோ