பொதுவாக நாம் செய்யும் ஒரு சில தவறுகள் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் தான் நாம் செய்யும் சின்ன தவறுகள் கிட்னியில் பெரிய கல் உருவாகி விடுகிறது. ஆம், சிறுநீரகக் கற்கள் சிறுநீரில் அதிக அளவு கால்சியம் , ஆக்சலேட் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றால் ஏற்படுகின்றன. 90% மக்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
மிளகை விட சிறியதாக இருக்கும் கற்கள், வலி இல்லாமல் சிறுநீர் மூலமாக வெளியேறி விடும். ஆனால் அதை விட சற்று பெரியதாக இருக்கும் கற்கள் கிட்னியிலிருந்து சிறுநீர் குழாய் முலம் சிறுநீர் பையை அடைந்து வெளியேறும். இதனால் கடுமையான வலி ஏற்படும். தற்போது உள்ள காலகட்டத்தில் இது போன்ற பிரச்சனை பலருக்கு உள்ளது. இதனால் பலர் கடுமையாக அவதிப்படுவது உண்டு.
இதற்காக நாம் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது முன்னோர் போல், வீட்டிலேயே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டுபிடித்துவிட்டால், பக்கவிளைவுகள் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இது போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறு கண்பீளை செடி முக்கிய மருந்தாக உள்ளது.
ஆம், இந்த சிறுகண்பீளை நாம் தொடர்ந்து 3 நாட்கள் எடுத்துக்கொண்டாலே, கற்கள் தானாக வெளியேறிவிடும். பொதுவாக சிறுகண்பீளை செடி, பூ, இலைக்கு ருசி மணம் கிடையாது. இதற்கு நீங்கள், சிறுகண்பீளையோடு பனைவெல்லத்தை சம அளவு சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த விழுதில் இருந்து, நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து குடிக்கலாம்.
இதனால் சிறுநீர் எரிச்சல் உடனடியாகக் குறையும். மேலும், சிறுநீரகக் கற்களைக் கரைத்து, சிறுநீரகப் பாதையில் உருவாகும் கிருமித் தொற்றுகளையும் அழிக்கும்.
Read more: இரவில், உங்களுக்கு அடிக்கடி கால் சுண்டி இழுக்குதா? அப்போ கட்டாயம் இதை படியுங்க..