fbpx

ஆராய்ச்சி மாணவனை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய வீட்டு உரிமையாளர்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

பணத்திற்கு ஆசைப்பட்டு ஆராய்ச்சி மாணவனை கழுத்தை நெறித்துக் கொன்று உடலை 3 பாகங்களாக வெட்டி கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டம் மோடிநகர் பகுதியில் உமேஷ் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் ஆராய்ச்சி மாணவரான அன்கித் கோகார் என்பவர் தங்கி பயின்று வந்துள்ளார். அவர் லெக்னெள பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பயின்று வந்துள்ளார். இந்நிலையில், அன்கித்தின் பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துள்ளனர். இதையடுத்து பாக்பாத் பகுதியிலிருந்த அவர்களின் பூர்விக சொத்தை அன்கித் கோகார் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அதன்பின் பெற்றோர் துணையின்றி, தனியொருவராக பயின்று வரும் அன்கித்தை, அவரின் வீட்டு உரிமையாளர் பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஆராய்ச்சி மாணவனை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய வீட்டு உரிமையாளர்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

அதன்படி, அன்கித்தை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை 3 பாகங்களாக வெட்டி மூன்று இடங்களில் உள்ள கால்வாயில் வீசியுள்ளார். இந்த சம்பவம் அக்டோபர் 6ஆம் தேதி அரேங்கேறியுள்ளது. அன்கித்திடம் இருந்து பல நாட்களாக எந்தவொரு பதிலும் வராததால், அவரின் நண்பர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அன்கித்தின் ஏடிஎம் கார்டில் இருந்து வீட்டு உரிமையாளர் ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். அத்துடன் அன்கித்தின் ஏடிஎம் கார்டை வீட்டு உரிமையாளர் தன் நண்பரிடன் கொடுத்து மீதமுள்ள பணத்தையும் எடுத்து வரும்படி கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! ஒலியை விட வேகமாக சென்று தாக்கும் அக்னி-5...

Fri Dec 16 , 2022
இந்தியா-சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஒலியை விட வேகமாக சென்று எதிரிகளை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. 5,000 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை கூட நிலப்பரப்பில் இருந்தே துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணையான “அக்னி-5” சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் […]

You May Like