fbpx

சித்த வைத்தியர் வீட்டை, தோண்ட தோண்ட எலும்புகள்..! கொலையில் முடிந்த ஓரினச்சேர்க்கை..!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் சித்த வைத்தியர் கைது, மேலும் கைதான சித்த வைத்தியர் வீட்டை சுற்றி ஏராளமான எலும்புகள் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் அசோக்ராஜ். இவர் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி சிதம்பரம் சென்று வருவதாக கூறிய இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது பாட்டி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

காவல்துறையின் விசாரணையில் அசோக் தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த கேசவமூர்த்தி என்ற சித்த வைத்தியரின் வீட்டிற்கு கடைசியாக சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தியது. அப்போது அசோக் ராஜ் தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாகவும் அதனால் வாழ பிடிக்கவில்லை என தன்னிடம் கூறியதாகவும் கேசவமூர்த்தி தெரிவித்தார். எனவே நல்ல மருத்துவரை பார்க்கும் படி அவருக்கு பரிந்துரை செய்ததாகவும் தெரிவித்தார் பின்னர் அசோக் ராஜ் தனது ஊருக்கு சென்று தனக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் அதில் ஆண்மை குறைவு காரணமாக இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை என்று மீண்டும் எழுதியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த கடிதம் அசோக் ராஜின் கையெழுத்து இல்லை என அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்களது பாணியில் சித்த வைத்தியரிடம் விசாரணை நடத்தியதில் அசோக் ராஜா கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அசோக்ராஜ் மற்றும் சித்த மருத்துவர் கேசவமூர்த்தி இடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்திருக்கிறது. அப்போது கேசவமூர்த்தி ஆண்மை வீரியத்திற்கான மருந்துகளை அசோக்ராஜுக்கு கொடுத்திருக்கிறார். அதை சாப்பிட்ட அசோக்ராஜ் மயங்கி விழுந்து விடவே அவர் இறந்து விட்டதாக நினைத்து அவரது தலையை வெட்டி உடலை எரித்து தனது வீட்டு தோட்டத்தில் புதைத்து இருக்கிறார். காவல்துறையின் விசாரணையில் இந்த உண்மைகளையும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை மாவட்ட கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் கே.எம். செல்வராஜின் தோட்டத்தில் இருந்த அசோக் ராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. சித்த வைத்தியர் கேசவமூர்த்தியின் வீட்டை போலீசார் சோதனை செய்தபோது வீட்டைச் சுற்றிலும் பல இடங்களில் ஏராளமான எலும்புகள் இருந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், விசாரணையில் பல தகவல்கள் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Kathir

Next Post

ABC ஜுஸ் கேள்விப்பட்டிருப்போம், பெண்களுக்கு அருமருந்தாக விளங்கும் PBC ஜுஸ் கேள்விப்பட்டு இருக்கீங்களா.?

Thu Nov 23 , 2023
பெண்களுக்கு ஏற்படும் பிசிஓஎஸ் பிரச்சனை ரத்த சோகை ஆகியவற்றை போக்கவும் முகத்திற்கு புதுப்பொலிவையும் பளபளப்பையும் தரக்கூடிய ஒரு அற்புதமான ஜூஸ் ரெசிபியை பார்ப்போம். இந்த ஜூஸ் பிபிசி ஜூஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ஜூஸ் பிபிசி என அழைக்கப்படுவதற்கு காரணம் இதில் பயன்படுத்தப்படும் பைனாப்பிள் கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவையாகும். இந்த ஜூஸ் செய்வதற்கு முதலில் 1/4 அன்னாசி பழம் 5 கேரட் 1 பீட்ரூட் மற்றும் சிறிது துண்டு […]

You May Like