விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களுடன் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அவர் பேசுகையில்,
* அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் அரசியல். இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்ல வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?
* தமிழ் நாட்டில் புதிய வரலாற்றை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
* மாண்புமிகு மன்னராட்சி முதல்வரே.. முத்துவேல் கருணாநதி என பெயரை மட்டும் வீரமாக சொன்னால் போதாது.
* திமுக ஆட்சியை பற்றி கேள்வி எழுப்பினால் மட்டும் ஏன் கோபம் வருகிறது.
* உங்களால் பாதிக்கப்படுகிற என் தமிழ் நாட்டு சகோதரிகள் உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார்கள்..
*மு.க.ஸ்டாலின், மோடி பெயரை கூற எனக்கு பயம் இல்லை
*ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி.. கொள்ளையடிக்க பாஜகவுடன் கூட்டணி