கிருஷ்ணகிரி மலையில், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் தனது உறவினருடன் அங்குள்ள மலைக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 4 இளைஞர்கள் குடிபோதையில் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வழிப்பறி செய்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கு தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், இருவர் தலைமறைவாகினர்.
இதையடுத்து, இருவரும் பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு சென்ற போலீசார், இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். ஆனால், குற்றவாளிகள் இருவரும், தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்கியுள்ளனர். இதனால், அவர்கள் காயமடைந்தனர்.
இதனால், தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சுரேஷ் என்ற குற்றவாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது. மற்றொரு குற்றவாளி நாராயணன் தப்பிச் சென்ற முயன்ற நிலையில், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, சிகிச்சையில் உள்ள சுரேஷின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 10-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த வீடியோவில், கிருஷ்ணகிரி மலை உச்சியில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோவும் இருந்தது. இதனால், சுரேஷால் ஏராளமான இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிருஷ்ணகிரி மலை உச்சிக்கு தனியாக வரும் காதலர்களை குறிவைத்து அவர்களை மிரட்டி வழிப்பறி செய்துள்ளனர். மேலும், இளம்பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
எனவே, இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார்..? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்..? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருக்றது. இந்நிலையில் தான், கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் பட்சத்தில் மேலும் பலர் இந்த வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கிருஷ்ணகிரி மட்டுமின்றி, தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாதம் ரூ.57,000 வரை சம்பளம்..!! கோவை மாவட்டத்தில் வேலை..!!