7 வயது சிறுமியை பள்ளி கழிவறையில் வைத்து 12 வயது சிறுவன் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே மாவல் என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஜூன் 26ஆம் தேதி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்றைய தினம் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த 7 வயது சிறுமியை அங்கு படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தனது வீட்டிற்கு வந்ததும் அழுதுகொண்டே தனது தாயிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், அவரை அழைத்துக் கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், சிறுமியை குழந்தைகள் நல ஆணையத்திடம் முன்னிறுத்தினர்.
மேலும், சம்பவம் தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனை சிறார் நீதி ஆணையம் விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளது. 12 வயது சிறுவன் பள்ளியில் இத்தகைய பாலியல் குற்றத்தை அரங்கேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.