கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பேளூர் சாலையில், அரசு கல்லூரி விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தயங்கி படித்து வந்துள்ளனர். இதில், தங்கி இருந்த ஒரு செகண்ட் இயர் படிக்கும் கல்லூரி மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்.
அவருக்கு விடுதியில் வைத்தவாறு விடுதி வார்டனே பிரசவம் பார்த்து இருக்கிறார். இந்த சம்பவம் பற்றி வெளியில் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படாமல் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தாய் சேய் இருவருக்கும் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் தற்போது வெளியில் வந்த காரணத்தால் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இந்த விஷயத்தை மறைத்த கல்லூரி விடுதி வார்டன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி இருவர் மீதும் இடம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், மாணவி எப்படி கர்ப்பமடைந்தார் என விசாரிக்காமல் இந்த விஷயத்தை மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.