ஈரோடு பவானியில் கடந்த சில தினங்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கானாமல் போனார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் பவானி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து விசாரணையில், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்றுள்ளார் ஒரு இளைஞர்.
பவானியில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் சாணந்தல் பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகன் அருண்குமார் (22), என தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்தனர்.