fbpx

மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்..!! 98 பேரை காவு வாங்கிய ’நால்கே’ புயல்..! பீதியில் பிலிப்பைன்ஸ்..!!

பிலிப்பைன்சை ’நால்கே’ புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ‘நால்கே’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக மகுயிண்டனாவ் மாகாணம், இந்த புயலால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்..!! 98 பேரை காவு வாங்கிய ’நால்கே’ புயல்..! பீதியில் பிலிப்பைன்ஸ்..!!

மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய அதிகனமழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்..!! 98 பேரை காவு வாங்கிய ’நால்கே’ புயல்..! பீதியில் பிலிப்பைன்ஸ்..!!

இந்நிலையில் புயல், மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பங்களில் தற்போது பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 69 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 63 பேரை காணவில்லை என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த புயல் காரணமாக 285.28 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு விவசாயத்துறை தெரிவித்துள்ளது.

மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்..!! 98 பேரை காவு வாங்கிய ’நால்கே’ புயல்..! பீதியில் பிலிப்பைன்ஸ்..!!

இந்த புயலால் மிமாரோபா, பைகால், சேம்பாங்கோ பெனிசுலா, சேன்டோஸ் சிட்டி, மேற்கத்திய பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

வெள்ளி, தங்கம் போன்ற உலோக முலாம் பூசப்பட்ட உணவை சாப்பிடலாமா? மருத்துவரின் பதில் இதோ.!

Mon Oct 31 , 2022
மனித உடல் எடையில் சுமார் 0.2 மில்லி கிராம் தங்கம் உள்ளது. இந்நிலையில், அதை நாம் இன்னும் சாப்பிட வேண்டுமா? அதற்கு தேவை இருக்கிறதா..? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி போன்ற பளபளப்பான, இணக்கமான உலோகங்களை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் அதன் மீது நமக்கு பசி இருக்கிறதா? மெலிதாக போடப்பட்ட தங்கத் தாள் மற்றும் வெள்ளியைக் கொண்ட இனிப்புகளை நாம் சாப்பிட ஆசைப்படுகிறோம். ஆனால், […]

You May Like