சமையலில் முக்கிய பங்குவகிக்கும் பருப்புகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைவு, வெப்ப அலைகள், தேவை அதிகரிப்பு, வரி உள்ளிட்ட பல காரணங்களால் பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.135இல் இருந்து ரூ.160ஆகவும், கடலை பருப்பு ஒரு கிலோ ரூ.110இல் இருந்து ரூ.130 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரி விலக்கு சலுகை வரும் 28ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி அறிவித்துள்ள நிலையில், தற்போது பருப்புகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
Read More : தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு..!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு..!!