fbpx

இல்லத்தரசிகளே உஷார்..!! திடீரென வெடித்து சிதறிய வாஷிங்மெஷின்..!! தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் கவாஸ்கார தெருவை சேர்ந்தவர்கள் சிவகிரிநாதன், புவனேஸ்வரி தம்பதியினர். புவனேஸ்வரி வழக்கம்போல இன்று துணி துவைப்பதற்காக வாஷிங்மெஷினில் துணிகளை போட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயம், வாஷிங்மெஷின் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த மற்ற பொருள்களிலும் தீ பரவிய நிலையில், வீடு முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

தூங்கிக் கொண்டிருந்த சிவகிரிநாதன் பதறி அடித்துக் கொண்டு வெளியே சென்று அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சி அடித்து 30 நிமிடத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமான நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.

Chella

Next Post

இந்த இடத்தில் எல்லாம் தண்ணீர் தேங்கவே இல்லை..!! மழைநீர் வடிகால் பணியால் என்ன பயன்..? மாநகராட்சி விளக்கம்..!!

Sat Dec 9 , 2023
சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், அதனால் எந்தெந்த பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றன என்பது குறித்த […]

You May Like