fbpx

இல்லத்தரசிகளே!. இன்று ஆடி வெள்ளி!. இந்த வளையல் அணிந்து வழிபட்டால் எவ்வித கஷ்டமும் தீரும்!

Aadi velli: இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளியே சுக்கிர வார பிரதோஷமாக அமைந்து விட்டது. இந்த நாளில் வீட்டில் உள்ளவர்கள் சில குறிப்பிட்ட நிறங்களில் ஆடை அணிந்து கொள்வதால் வீட்டில் இருந்து பொருளாதார தேக்க நிலை, கடன் பிரச்சனை, தொழில் நஷ்டம், பண இழப்பு, வீண் விரயம் போன்ற பிரச்சனைகள் நீங்கி, மகாலட்சுமியின் அருள் வீட்டில் நிறைந்து, செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.

ஆடி வெள்ளி அம்மனுக்குரிய மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் பெண்கள், அம்மன் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானதாகும். சிலர் குல தெய்வ வழிபாடும் செய்வார்கள். ஆடி வெள்ளியில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து வழிபடும் வழக்கமும் சில குடும்பங்களில் இருக்கும். அளவில்லாத பல சிறப்புக்களைக் கொண்ட ஆடி வெள்ளியில் செய்யப்படும் பூஜைகள், வழிபாடுகள் மட்டுமின்றி, செய்கின்ற ஒவ்வொரு காரியமும் பல மடங்கு பலனை பெற்றுத் தரும். அதனால் தான் ஆடி வெளியில் விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும் என சொல்வார்கள்.

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்ட சூழ்நிலை இருக்கும். மேலும் வருமான குறைவு, வியாபார விருத்தியின்மை, தொழில் நஷ்டம் என்று ஏதாவது ஒரு பிரச்சனையால் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆடி வெள்ளிக்கிழமையில் பெண்கள் வீட்டில் இந்த வளையல் அணிந்து இவற்றை செய்தால் அந்த மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்கு வந்து குடியேறுவாள் என்பது நம்பிக்கை. அப்படியான ஒரு எளிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பெண்கள் எப்பொழுதும் வீட்டில் வளையல் அணிந்து கொள்ளாமல் பூஜைகளை துவங்க கூடாது என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மையாகும். வளையல் அணிந்து கொள்ளாமல் செய்யப்படும் பூஜைகள் நிறைவுறாது. இப்படி அணியும் வளையலானது ரொம்பவே முக்கியமானது. எல்லா சாஸ்திர சடங்குகளுக்கும் வளையல் இன்றி அமையாததாக இருக்கிறது.

வளைகாப்பு செய்தாலும் சரி நலங்கு வைத்தாலும் சரி திருமணம் போன்ற எல்லா விசேஷங்களிலும் பெண்கள் என்றால் கை நிறைய வளையலோடு இருப்பதுதான் அவர்களுக்கு இறையருளை கூட்டும். இத்தகைய வளையல்களில் சங்கினால் செய்த வளையல் ரொம்பவே விசேஷமானது. சங்கும் ஆதிசேஷன் உடைய அம்சமாக விளங்குகிறது. சங்கில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். வலம்புரி சங்கு வீட்டில் வைத்து பூஜை செய்து வருபவர்களுக்கு வறுமை என்பதே ஏற்படாது.

மேலும் அத்தனை தோஷங்களையும் போக்கக்கூடிய இந்த அற்புதமான சங்கினால் செய்யப்பட்ட வளையலை வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அணிவது அவர்களுக்கு மகாலட்சுமி அருளை பரிபூரணமாக பெற்றுக் கொடுக்கும். சங்கு வளையல்கள் கடலோர கடைகளிலும் சாதாரண பேன்சி ஸ்டோர்களில் கூட நிலையாக கிடைக்க கூடிய ஒன்றுதான். இந்த சங்கினால் ஆன வளையல்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும்.உங்கள் கைகளில் சங்கு வளையல் இருக்கும் பொழுது நீங்கள் உங்கள் கைகளால் ஒரு ரூபாய் தானம் செய்தாலும் அது பல கோடியாக பெருகும் என்பது நம்பிக்கை.

காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து பூஜையறையை சுத்தம் செய்து பூஜைகளை முடித்துவிட வேண்டும். மகாலட்சுமியின் பாதத்திற்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விளக்கேற்றி பூஜை செய்த பின்பு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் கணவர் அல்லது தந்தை என்று யார் வருமானம் செய்கிறாரோ அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய கைகளால் அந்த ஒரு ரூபாயை கொடுத்து வழி அனுப்ப வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சங்கு வளையல் அணிந்து பூஜை செய்து ஒரு ரூபாய் கொடுக்கும் பொழுது அது பல ரூபாயாக பெருக்கி உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஒற்றுமையை அதிகரிக்க செய்து பொருளாதார ரீதியாக உங்களை மேம்பட செய்யலாம்.

Readmore: முஸ்லீம் திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய முடிவு!. அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா அதிரடி!

English Summary

Housewives! Today is Audi Friday! If you worship wearing this bangle, any problem will be solved!

Kokila

Next Post

தூள்...! இனி போலி பத்திர பதிவு.. சொத்து பட்டா..! அதிகாரிகளுக்கு அரசு ஸ்ட்ரீட் உத்தரவு...!

Fri Jul 19 , 2024
No more fake deed registration.. Property deed..! Government Street Order to Officers

You May Like