fbpx

18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் எப்படி தெரியவந்தது? பெற்றோர்களை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்…

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் லாட்டரி, ரம்மி போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான்கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ’8 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி பெற்றோர்களே? என கேள்வி எழுப்பினர். மேலும், இதில் அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன’ என கருத்து தெரிவித்து, வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Kathir

Next Post

சிவாஜி மகன் மற்றும் பேரனுக்கு பிடிவாரண்ட்!!! கரணம் என்ன?

Tue Nov 29 , 2022
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த்தும் அவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றனர். இவர்கள் மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக நடவடிக்கைக்காக தொடர்பு வைத்துள்ளனர். இந்நிலையில் வியாபார நடவடிக்கைக்காக துஷ்யந்த் சார்பாக மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலை கடந்த 2019-ம் ஆண்டு அளித்ததாகவும், ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகள் இரண்டுமே திருப்பி அனுப்பப்பட்டன, […]
’இந்த மாதிரி செய்தால் அது பலாத்காரம் ஆகாது’..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like