fbpx

மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிப்பது எப்படி..? ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் எப்படி தபால் வாக்கு அளிக்க முடியும் என்பது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் தகுதியான அனைவரும் முறையாக வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் 2,222 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று உள்ளவர்கள், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்களும் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) வருகிற 24ஆம் தேதிக்குள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் வீடுகள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று படிவம் ’12 டி’ வழங்க உள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் ஓட்டுபோட வசதியாக முன்கூட்டியே செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். செல்போன் எண் குறிப்பிடாதவர்களுக்கு தபால் மூலமாக அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

அதன்படி, குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டுக்கு நேரில் வந்து அடையாளத்தை சரிபார்ப்பார்கள். வாக்காளரின் கையொப்பம் அல்லது கைரேகை பெற்ற பின்னர் ஓட்டு போடும் முறை குறித்து எடுத்துக்கூறி, வாக்குச்சீட்டு கொடுத்து ஓட்டு போடவைப்பார்கள். கண்பார்வையற்றவர், வாக்களிக்க இயலாத நிலையில் உள்ளவர்கள், மாற்று நபர் மூலம் வாக்களிக்க வைக்கப்படுவார்கள்.

முதல் முறை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும்போது வாக்காளர் இல்லை என்றால், மீண்டும் ஒருமுறை நேரில் வந்து ஓட்டு போட வாய்ப்பு அளிப்பார்கள். அப்போதும் இல்லையென்றால், தபால் ஓட்டுபோட வாய்ப்பு அளிக்கப்படாது. மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் நகல் அளிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் சுகாதார அதிகாரியின் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். இதுதொடர்பான விவரங்கள் தேவைப்படுபவர்கள் 0424 226766 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : PM Modi | ”நான் இருக்கும் வரை இந்து மதத்தை அழிக்க விடமாட்டேன்”..!! பிரதமர் மோடி சூளுரை..!!

Chella

Next Post

சீமான் - விஜயலட்சுமி வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!! ஏப்ரல் 2ஆம் தேதி கன்ஃபார்ம்..!!

Tue Mar 19 , 2024
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

You May Like