fbpx

”அதை எப்படி கெளதமியிடம் என்னால் சொல்ல முடியும்”..!! சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை..!!

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, அதிமுகவில் இணைந்த நிலையில், அண்ணாமலை சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாஜகவில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதற்கு, அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கட்சியில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இல்லை என்றும் கௌதமி குற்றம்சாட்டியுள்ளார். பின்னர், கடந்த அக்டோபர் மாதம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்தது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் நேரத்தில் பலர் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைவார்கள். அது ஒன்றும் புதிதல்ல.

ராஜபாளையத்தில் தனக்கு சீட் கொடுக்கவில்லை என்று நடிகை கௌதமி பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இப்போது அதிமுகவில் இணைந்துள்ளார். ஆனால், ராஜபாளையம் தொகுதியை அதிமுக கேட்டும், பாஜக கொடுக்கவில்லை என்பதை கெளதமியிடம் எப்படி என்னால் சொல்ல முடியும். சில விஷயங்களை பொது வெளியில் பேச முடியாது. அவருக்கே படிப்படியாக தெரியவரும்” என்றார்.

Chella

Next Post

’பாஜக வேண்டாம்’.!! ’அதிமுகவுடன் கூட்டணி அமையுங்கள்’..!! பிரேமலதாவிடம் வலியுறுத்தும் மாவட்ட செயலாளர்கள்..!!

Sat Feb 17 , 2024
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் வலியுறுத்தியுள்ளனர். தொகுதி பங்கீடு விவகாரத்தில் பிடிவாதம் காட்டாமல் பேச்சுவார்த்தை நடத்தவும் பிரேமலதாவுக்கு மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கக் கூடாது என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என பிரேமலதா கூறியிருந்தார். கூட்டணிக்கு தயார் என பிரேமலதா […]

You May Like