fbpx

”என்கூட எல்லாம் பண்ணிட்டு வேற ஒரு பொண்ணுக்கூட எப்படி”..? 2 முறை அபார்ஷன்..!! கதிகலங்கி போன கல்யாண மண்டபம்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையில் பிரியதர்ஷிணி என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிஜீன் (27 வயது) என்பவரும் பிரியதர்ஷினிக்கு பழக்கம் ஏற்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் லிஜீனுக்கும் பிரியதர்ஷிணிக்கும் கடந்தாண்டு நண்பர்கள் முன்னிலையில் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர், தாம்பரம் சேலையூரில் வீடு எடுத்து கணவன்-மனைவியாக இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது, இருமுறை அபார்ஷன் ஏற்பட்டதாகவும் பிரியதர்ஷிணி கூறியுள்ளார்.

இந்நிலையில், திடீரென லிஜீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தேவாலயத்தில் அந்த பெண்ணுடன் திருமணம் நடைபெறப்போவதாக பிரியதர்ஷிணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசாரிடம் வழக்கறிஞர்கள் மூலம் புகார் அளித்துவிட்டு, திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்த பிரியதர்ஷிணி, தன்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தேவாலயத்தில் திருமணம் நடைபெறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணை சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், பிரியதர்ஷிணி வர மறுத்து ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரை மகளிர் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றினார்கள்.

அப்போது அந்த பெண் வரமறுத்து, என் வாழ்க்கையே போய்விட்டது என்று கதறி அழுதார். அப்போது அவரிடம் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிப்போம் என்று கூறியுள்ளனர். ஆனால், முடியாது என்று அவர் மறுத்துள்ளார். இதனால் பிரியதர்ஷிணியை வலுக்கட்டாயமாக போலீசார் ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

Read More : ஃபெஞ்சல் புயல்..!! வாய்ப்பை தவறவிட்ட விஜய்..!! எல்லாம் பேச்சு மட்டும் தானா..? திமுக, அதிமுக வளர இதுதான் காரணம்..!!

English Summary

The two had settled down in Tambaram’s Selaiyur and were raising a family as husband and wife. Priyadarshini also said that they had two miscarriages during that time.

Chella

Next Post

Air Fryer : ஏர் ஃபிரையரில் சமைப்பது புற்று நோயை ஏற்படுத்துமாம்..! - நிபுணர்கள் எச்சரிக்கை

Tue Dec 3 , 2024
Air Fryers Are Toxic and Can Cause Cancer, Says Expert; Here's How

You May Like