உத்திரபிரதேச மாநிலத்தில் சொந்த மகனோடு பாலியல் ரீதியாக தவறான உறவில் இருந்ததை தெரிந்து கொண்ட கணவன் மற்றும் மற்ற மகன்கள் உள்ளிட்டோர் சேர்ந்து, ஒரு பெண்ணை கொடூரமான முறையில் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. உத்திரபிரதேசத்தை சார்ந்த ராம்குமார் என்பவரின் மனைவி மாயாதேவி என்பவர் தான் இப்படி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாயா தேவி தன்னுடைய மகன்களில் ஒருவருடன் தகாத உறவை ஏற்படுத்திக் கொண்டு, அவருடன் உல்லாசமாக இருந்தது குறித்து, அவருடைய கணவர் ராம்குமார் மருமகன் மற்ற மகன்கள் உள்ளிட்டோர் ஒரு கட்டத்தில் தெரிந்து கொண்டதைத் தொடர்ந்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி அவரை ஒரு ஜீப்பில் கொலை செய்வதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது செல்லும் வழியில் இது குறித்து அவர்களிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
எப்படியும் தன்னை அழைத்துக் கொண்டு போய் கொலை செய்ய போகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட அந்தப் பெண், ஓடிக்கொண்டிருக்கும் ஜீப்பில் இருந்து குதித்து தப்ப முயன்றார். ஆனாலும் மகன், மருமகன், கணவர் உள்ளிட்ட நபர்கள் அந்த பெண்ணை தப்பித்து செல்ல அனுமதிக்கவில்லை. மாயாதேவியின் கழுத்தை நெறித்து, கோடாரியால் அவர் தலையை வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்து, அந்தப் பெண்ணின் கைகளில் இருந்த நான்கு விரல்களையும் வெட்டி, கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்கள்.
அதாவது கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரலாம் என்று அந்த பெண்ணிடம் தெரிவித்து குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் சேர்ந்து, அந்த பெண்ணை அழைத்துச் சென்று, நடு வழியில் இந்த கொடூர கொலையை நிகழ்த்தியுள்ளனர் என்ற தகவல், காவல்துறையினருக்கு அதிர்ச்சி தரும் விதமாக இருந்தது. அதன் பிறகு அவருடைய உடலை ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் போட்டுவிட்டு, ஆண்கள் வீடு திரும்பி விட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்ததில் அனைத்து உண்மையும் தெரிய வந்ததை தொடர்ந்து, காவல்துறையினர், அதிரடியாக அனைவரும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.