fbpx

விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் எப்படி இங்கிலாந்து அரசக் குடும்பம் வசம் சென்றது..?

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், காலமானதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராகி உள்ளார்.. இதனால் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்.. இதன் மூலம் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலா வசம் செல்கிறது..

இங்கிலாந்து ராணியின் கிரீடம் பிரபலமானது.. இந்த கிரீடம் 2800 வைர கற்கலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.. இந்த கிரீடத்தின் மையத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டுள்ளது.. 105 கேரட் கோஹினூர் வைரம், 21 கிராம் எடை கொண்டதாகும்.. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கோஹினூர் வைரம் கருதப்படுகிறது. இது 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிரீடத்தில் விலை மதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைர கற்கலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நகை அரச குடும்பத்தின் வசம் வந்தது எப்படி என்று தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்… கோஹினூர் எங்கிருந்து எப்படி வந்தது என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், முகலாயப் பேரரசர் ஷாஜஹானைப் பற்றிய நூல்களில் கோஹினூர் வைரம் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.. ஷாஜகான் ஒரு நகை பதித்த சிம்மாசனத்தை உருவாக்கினார் என்றும், அதை உருவாக்க 7 ஆண்டுகள் ஆனது என்றும் கூறப்படுகிறது. அந்த சிம்மானசத்தின் இரு பக்கங்களிலும் இரண்டு மயில்கள் இருந்ததாம்.. அதில் ஒன்றில் தைமூர் ரூபி, மற்றொன்றில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்ததாம்..

முகலாயர்கள் இந்தியாவின் மீது தங்கள் மேலாதிக்கத்தைத் தொடர்ந்தபோது, ​​1739 இல் டெல்லியை ஆக்கிரமித்த பாரசீக ஆட்சியாளர் நாதர் ஷா உட்பட பலரின் கவனத்தை ஷாஜகானின் சிம்மாசன்ம் ஈர்த்தது.. படையெடுப்பிற்குப் பிறகு, மயில் சிம்மாசனத்தை நாதர் ஷா கைப்பற்றினார்.. ஆனால் தைமூர் ரூபி மற்றும் கோஹினூர் வைரத்தை கவசத்தில் பதிக்க அவர் அகற்றினார்..

ஆப்கானிஸ்தானில் இருந்த கோஹினூர் வைரம் 70 ஆண்டுகளாக ஒரு ஆட்சியாளரிடமிருந்து மற்றொரு ஆட்சியாளருக்குச் சென்றது, இறுதியாக இந்தியாவுக்குத் திரும்பியது.. 1813-ல் சீக்கிய ஆட்சியாளர் ரஞ்சித் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்தது.. 1839-ல் ரஞ்சித் சிங் இறந்த பிறகு, பஞ்சாபி சிம்மாசனம் நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு ஆட்சியாளர்களுக்கு கைமாறியது..

அந்த வரிசையில் கடைசியாக 10 வயது சிறுவன் துலீப் சிங் இருந்தார். துலீப்பை சிறையில் அடைத்து, லாகூர் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் சட்டப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிடுமாறு அவரை ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்தினர். கோஹினூர் வைரம் பின்னர் விக்டோரியா மகாராணியின் சிறப்பு உடைமையாக மாறியது.

விக்டோரியா மகாராணியின் கணவர், இளவரசர் ஆல்பர்ட், கோஹினூர் வைரத்தை மீட்டெடுத்து மெருகூட்டினார்.. 186 கேரட் என்ற அளவில் இருந்த வைரத்தை பாதியாக குறைத்தது, அதாவது 105 கேரட் என்ற அளவுக்கு கொண்டு வந்தார்.. விக்டோரியா வைரத்தை தனது ஆடையுடன் சேர்த்து அதை அணிந்திருந்தார், ஆனால் பின்னர் அது விக்டோரியாவின் மூத்த மகனான எட்வர்ட் VII இன் மனைவி ராணி அலெக்ஸாண்ட்ராவின் கிரீடத்தின் ஒரு பகுதியாக மாறியது, பின்னர் விக்டோரியாவின் பேரன் ஜார்ஜ் V இன் மனைவி ராணி மேரியின் கிரீடத்தில் இருந்தது.

1937 ஆம் ஆண்டில், ஆறாம் ஜார்ஜ் மனைவியான ராணி எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்தது.. பின்னர் கோஹினூர் வைரத்துடன் கூடிய கிரீடம் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு வழங்கப்பட்டது, தற்போது அவரது சவப்பெட்டியின் மேல் கோஹினூர் வைரம் இருக்கிறது…

Maha

Next Post

அக். 1 முதல் கிரெடிட், டெபிட் கார்டு விதிகள் மாறப்போகிறது.. வாடிக்கையாளர்களை பாதிக்குமா..?

Thu Sep 15 , 2022
இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வருகின்றன.. இதனால், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான விதிகள் அடுத்த மாதம் முதல் மாறும்.. ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷன் வழிகாட்டுதல்களுக்கான முந்தைய காலக்கெடு ஜூலை 1 ஆகும், இருப்பினும், பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு பிரதிநிதித்துவங்களின் பின்னணியில் இது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் […]
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஈஸியா இதை செய்யலாம்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

You May Like