Guinness: தென்கொரியாவில் நாய்கள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில், அவைகளை நடைபயிற்சி அழைத்து சென்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நாய்களை சமைத்து உணவாக உண்கிறார்கள். இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தவிர்க்கும் வகையிலும், செல்லப்பிராணிகள் பராமரிப்பின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தென்கொரியாவில் நடத்தியது.
அதில் கனடாவை சேர்ந்த மிட்செல் ரூடி என்ற வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் 38 நாய்களை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 36 நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்து சென்றதே சாதனையாக இருந்தநிலையில் அதனை முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றது. சாதனையில் பங்கேற்ற அனைத்து நாய்களும் இறைச்சி கடைகளில் இருந்தும், சாலையோரங்களில் இருந்தும் மீட்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: தீவிர புயலாக மாறும் ’டானா’..!! 120 கிமீ வேகத்தில் சூறைக்காற்று..!! சென்னையை பாதிக்குமா..?