fbpx

’பாஜகவுக்கு மட்டும் தேசிய மலர் தாமரையை எப்படி கொடுத்தீங்க’..? NTK Seeman விளாசல்..!!

சென்னை தலைமைச் செயலகத்தில், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து பேசிய பின், செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”நம்மை மாதிரி அவர்களும் பதிவு செய்யப்பட்ட கட்சி தான். அவர் கர்நாடகாவில் ஒரு சின்னம். ஆந்திராவில் ஒரு சின்னம் வாங்கியிருக்கிறார். நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டுள்ளோ. இருப்பதிலேயே தனித்த கட்சி என்றால் திமுக, அதிமுகவுக்கு பிறகு நாங்கள் தான். அதை ஏற்காமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக சொல்கிறார்கள்.‌

வெள்ள பாதிப்பின்போது, தூத்துக்குடி சென்றதால் நான் கொஞ்சம் தாமதமாக கொடுத்தேன். கமல்ஹாசனின் டார்ச் சின்னம் வெளிவரும் போது இதுவும் வருகிறது. இதை கேட்டால் உரிய பதில் சொல்லவில்லை. இருவரிடமும் மனுவை வாங்கிக் கொண்டு இந்த சின்னத்திற்கு யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதை செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 7% ஓட்டு வாங்கியிருக்கும் போது எனக்கு அந்த சின்னத்தை ஒதுக்கி இருக்க வேண்டும்.

தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து பேசியிருக்கிறோம். அவர் பரிந்துரைப்பதாக
கூறியிருக்கிறார். இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வரும். அடுத்ததாக உச்சநீதிமன்றம் செல்வேன். எந்த சின்னமும் இல்லையென்றாலும் போட்டியிடுவேன். இது எப்படி முறையாகும்? நான் முதலில் புலி கேட்டேன். அது தேசிய விலங்கு என்று சொன்னீங்க. அடுத்து மயில் கேட்டேன். தேசிய பறவைன்னு சொன்னீங்க. ஆனால் தேசிய மலர் தாமரையை பிஜேபிக்கு எப்படி கொடுத்தீங்கன்னு கேட்டேன். நீங்கள் அந்த மாதிரி கொடுத்திருக்க கூடாது தானே? தேர்தல் நேரத்தில் சின்னங்களை
எல்லாம் மறைக்கிறீர்கள்.

கை சின்னத்தை கொடுத்தீர்கள். வாக்கு செலுத்தி விட்டு
கையை ஆட்டி கொண்டு சென்றால் கையை வெட்டி விடுவீர்களா? ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொருவருக்கும் புதிது புதிதாக கொடுத்து விடுங்கள். நீங்கள் 8 விழுக்காடு தொட வேண்டும் என்கிறீர்கள். 7 தொட்டவுடன் சின்னத்தை தூக்கி விடுகிறீர்கள்? இது தான் ஜனநாயகமா? லஞ்சம், ஊழல் செய்பவர்கள் தான் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். எப்படி ஒழியும்? கடைசியாக எந்த சின்னம் கொடுத்தாலும் சரி தான்.

துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன். எந்த சின்னமாக இருந்தாலும் நான் போட்டியிடுவேன். எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள் சீமானுக்கு என்ன சின்னம் என்று பார்த்து தான் போடுவார்கள். நான் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். வேளாண்மை அரசு பணி என்கிறேன். நான் வேளாண் குடிமகன்
என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன். அதனால், விவசாய சின்னம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் போராடுகிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Read More : ISRO தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் பாதிப்பு..!! ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட நாளில் நடந்த அதிர்ச்சி..!!

Chella

Next Post

Awards: விருதுகளை வாரி குவித்த ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்'!… தமிழக அரசின் திரைப்பட விருதுகள்!… முழு பட்டியல்!

Tue Mar 5 , 2024
Awards: 2015ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகளில், ஜெயம் ரவியின் தனி ஒருவன் படித்திற்கு 6 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (06.03.2024) புதன்கிழமை மாலை 06.00 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது. […]

You May Like