fbpx

இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை எப்படி உள்ளது..? வெளியான புதிய தகவல்..

காய்ச்சல் பாதிப்பு காரணமாக பிரபல இயக்குனர் பாரதிராஜா மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

பிரபல இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து குறைபாடு, நுரையீரல் சளி ஆகிய பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அதில் பூரண குணமாகி வீடு திரும்பினார். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் பாரதிராஜாவுக்கு நேற்று மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் சிகிச்சை பெற்ற அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், பெரிதாக கவலைப்பட எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

Maha

Next Post

தாயின் கருவில் உள்ள குழந்தை... உணவின் சுவை உணரும் ஆச்சரியம்; ஆய்வில் தகவல்..!!

Sat Sep 24 , 2022
வடகிழக்கு இங்கிலாந்தில் இருக்கிறது டர்ஹாம் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் சுவாரசிய முடிவு இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தாயின் கருவில் உள்ள குழந்தைகள் பல்வேறு உணவின் சுவைகள் மற்றும் வாசனைகளை உணர்ந்து அதனுடைய முக பாவனைகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பது தான் அந்த ஆராய்ச்சி. டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 100 கர்ப்பிணிப் பெண்களிடம் 4டி அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளை செய்தனர். இந்த ஆய்வின் […]

You May Like