சூர்யா நடித்துள்ள கங்குவா படத்துக்கு கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில், படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ மூலம் விமர்சனத்தை சொல்லியுள்ளார்.
கங்குவா திரைப்படத்தில் அந்த காலத்தில் இருந்து கலியுகம் (இந்த காலம்) வரை சூர்யாவும் பாபி தியோலும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றனர். கார்த்தி ஸ்பெஷல் கேமியோவாக நடித்து கலக்கியுள்ளார் எனக் கூறியுள்ளார். படம் குறித்து அவர் சொல்லியிருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
சூர்யாவின் உழைப்பும் சிறுத்தை சிவாவின் மெனக்கெடலும் கங்குவா படத்தில் நன்றாகவே தெரிகிறது. இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நாமும் நடித்து விடலாம் என்கிற ஆசை சூர்யாவுக்கு வந்த நிலையில், அதிக பொருட்செலவில் கங்குவா படத்தை உருவாக்கியுள்ளனர். படம் பார்க்க நல்லாவே இருக்கு என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
தீவு ஒன்றில் வசித்து வரும் சூர்யாவின் கூட்டத்துக்கும் பாபி தியோலின் கூட்டத்துக்கும் இடையே மாவீரன் யார் என்பதில் போட்டி நிலவுகிறது. அதற்காக இருவரும் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சண்டை போட்டு வருகின்றனர். இறுதியில் சூர்யா சிக்ஸ் பேக் காட்டி பாபி தியோலை அடித்து வீழ்த்தினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையை சூர்யாவுக்கு ஏற்றது போல சிறுத்தை சிவா மாற்றியுள்ளார்.
சூர்யா, பாபி தியோலை தொடர்ந்து படத்தில் ரசிகர்களை அதிகம் ஈர்ப்பது திஷா பதானியின் கவர்ச்சி தான். குறைந்த நேரமே வந்தாலும் திஷா பதானி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் விடுகிறார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி காமெடி கைகொடுத்திருக்கிறது. கார்த்தி கடைசி நேரத்தில் சர்ப்ரைஸ் கேமியோவாக நடித்துள்ளார். அதிக பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், போட்ட காசை எடுப்பார்களா? என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது என சில நெகட்டிவ் கருத்துக்களையும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
Read More : மாஸ் காட்டும் பத்திரப்பதிவுத்துறை..!! மக்களே அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?