fbpx

‘சலார்’ திரைப்படம் எப்படி இருக்கு..? ஓவர் பில்டப்பா இருக்கே..!! கேஜிஎஃப் ஸ்டைலில் பட்டி டிங்கரிங்..!! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!

பிரபாஸ் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவான சலார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியான சலாருக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. ஆனால், விமர்சன ரீதியாக இதுவரை கலவையாகவே ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பாகுபலிக்குப் பின்னர் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் படங்களில் நடித்தார் பிரபாஸ். இந்தப் படங்கள் மோசமான தோல்வியைத் தழுவின.

அதனால் சலார் படத்தை பெரிதும் நம்பியிருந்தார் பிரபாஸ். இப்போது சலார் படமும் பிரபாஸை கை விட்டுவிட்டதாகத் தெரிகிறது. இந்தப் படம் பற்றி விமர்சனம் கூறியுள்ள சென்னை ரசிகர்கள், சலார் எதிர்பார்த்த அளவில் இல்லை என்கின்றனர். அதேநேரம் பிரபாஸின் ஆக்‌ஷன், நடிப்பு சூப்பராக இருந்தது. இடைவேளை காட்சியும் க்ளைமேக்ஸும் தரமாக இருக்கு. முக்கியமாக கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2-வை விட சலாரில் ஃபைட் சீன்ஸ் வேற லெவல் மேக்கிங் என ஃபையர் விட்டுள்ளார் ஒரு ரசிகர்.

அதேபோல் முதல் பாதியில் ஓவர் பில்டப், ஹைப் ஹைப்-ன்னு ஏத்திவிட்டு, இரண்டாவது பாதியில் எதுவுமே இல்லாமல் செய்துவிட்டார் என விமர்சித்துள்ளார். 2-வது பாதியில் திரைக்கதை வேகம் எடுக்கவில்லை எனவும், திரும்ப திரும்ப கேஜிஎஃப் ஸ்டைல் மேக்கிங்கில் பட்டி டிங்கரிங் பார்த்து சலார் படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். கேஜிஎஃப் அளவுக்கெல்லாம் சலார் ஒர்த்தே கிடையாது. க்ளைமேக்ஸ் மட்டும் சலார் பார்ட் 2-க்கு லீட் வைத்து முடித்துள்ளது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், பிருத்விராஜ் ரோல் நன்றாக இருப்பதாகவும் அவரும் பிரபாஸுக்கு நிகராக ஸ்கோர் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆனால், பிரபாஸ் எல்லா காட்சிகளிலும் ஸ்லோ மோஷனில் நடந்து வருவது, கேப் விட்டு விட்டு வசனங்கள் பேசுவது எல்லாம் சகிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல், ரவி பஸ்ரூரின் இசையும் பாடல்களும் படத்துக்கு சப்போர்ட்டாக இல்லை என கூறியுள்ளனர். பிரசாந்த் நீல் இதுவரை அவர் எடுத்த படங்களை மிக்ஸ் செய்து சலார் படத்தை இயக்கியுள்ளார். 2 நண்பர்கள் பற்றிய கதைக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லை என்றும், இதெல்லாம் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும், தமிழ் ரசிகர்களை ஏமாற்ற முடியாது எனவும் விமர்சித்துள்ளனர்.

Chella

Next Post

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 30 தீவிரவாதிகள்.! சீனா பாகிஸ்தானின் விளையாட்டு முறியடிக்கப்படும்.! ராணுவம் எச்சரிக்கை.!

Fri Dec 22 , 2023
பாகிஸ்தானை சேர்ந்த 20 முதல் 30 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தனது செய்தி குறிப்பில் வெளியிட்டு இருக்கிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கு எதிராக நேற்று மாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதோடு மூன்று […]

You May Like