fbpx

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்..? நேரில் பார்த்த நடிகர் நாசர் பரபரப்பு பேட்டி..!!

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஆர். கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்டத் திரையுலகத்தினர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவரால் பேச முடியாத நிலையில், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

விஜயகாந்தை சந்தித்தப் பின்பு நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “சமீப நாட்களாக செய்திகளில் விஜயகாந்தின் உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அனைத்தும் மிகையானவையே! நாங்கள் தலைமை மருத்துவரையும் பார்த்தோம். ‘அவர் வருவார்… உங்கள் எல்லாரையும் பார்ப்பார்’ என மருத்துவர் சொன்னார்.

அதனால் தயவுசெய்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை பரப்ப வேண்டாம். அவர் உறுப்புகள் நன்றாகவே செயல்படுகின்றன. ஓரிரு மாதங்களுக்கு முன்பு கேப்டன் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கையோடு இருக்கிறோம். அவருக்கு இன்ஃபெக்சன் இருப்பதால் நாங்கள் முகமூடி அணிந்து கொண்டு வெளியில் இருந்து பார்த்தோம்” என்றார்.

Chella

Next Post

புயல் எச்சரிக்கை..!! மக்களே ரெடியா..? பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு..!!

Sat Dec 2 , 2023
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரச கால மருத்துவ குழுக்கள், நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் […]

You May Like