fbpx

ஒன்றரை ஆண்டு பிணத்துடன் வாழ்ந்தது எப்படி ?.. விசாரணை நடத்த தனிகுழு அமைப்பு …

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலுடன் வாழ்ந்தது எப்படி என்பதை விசாரிக்க இணை ஆணையர் தனிகுழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணத்துடன் குடும்பத்தினர் ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இது பற்றி விசாரணை நடத்தி காவல்துறை இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி ஒரு விசாரணை குழுவை அமைத்துள்ளார். இதற்கு ஏ.டி.சி.பி. லக்கான் சிங் யாதவ் தலைமை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு.. பிணம் அழுகிவிடாமல் இருக்க என்ன முறையை கையாண்டார்கள் எதற்காக அந்த பிணத்தை உறவினர்கள் இத்தனை மாதங்களாக வைத்திருந்தனர் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கண்டறிவார்கள்.

உயிரிழந்த நபரின் அலுவலகம் , வங்கி , பிற துறைகள் சம்மந்தபட்ட இடங்களிலும் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினார்கள். விமலேஷ் திக்சித் என்ற அந்த நபர் கடந்த 2021ல் ஏப்ரல் 22ம் நாள் சுவாச கோளாறு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கான இறப்பு சான்றிதழை தனியார் மருத்துவமனை ஒன்று வழங்கியுள்ளது. மேலும் இறந்துபோன நபர் வருமான வரித்துறையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் என்பதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் கோமா நிலையில் உள்ளதாக நினைத்து 18 மாதங்கள் வரை பிணத்தை வீட்டிலேயே வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

இருந்தாலும் , உடல் துர்நாற்றம் வராமல் , அழுகாமல் இருந்தது போலீசாரை குழப்பத்தை அடையச் செய்துள்ளது. உடலின் சதைகாய்ந்து எலும்புகளுடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளனது. எந்தவித பொருளும் பயன்படுத்தவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கங்கைநீரால் குளியல் : கங்கை நீரால் உடலை சுத்தம் செய்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உடையை மாற்றியுள்ளனர். மேலும் செப்டம்பர் 23ம் தேதி சுகாதார அதிகாரிகள், போலீஸ், நீதிபதிகள் வீட்டில் சோதனை நடத்தியபோதுதான் அக்கம்பக்கத்தினருக்கே இந்த விஷயம் தெரியவந்துள்ளது.

இறந்துபோன இந்த நபர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அலுவலகத்திற்கு செல்லாதது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்தபோது , அவர் கோமாவில்இருப்பதாக தகவல் அளித்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினரிடம் கேட்டபோது அடிக்கடி ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள் . அப்போது கேட்டால் ஏதாவது கூறுவார்கள் என கூறியுள்ளனர். மேலும் தீட்சித்தின் மனைவி மன நிலை பாதிக்கப்பட்டவர் எனவும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Post

ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழையால் வீடு இடிந்தது … இடிபாடுகளில் சிக்கி 4 சிறுமிகள் பரிதாப பலி ..

Mon Sep 26 , 2022
ஹிமாச்சலபிரதேசத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சர்மாவூர் என்ற மாவட்டத்தில் கிஜிவாடி கிராமத்தில் வீடு ஒன்று இடிந்தது. இதில் மம்தா(27), மற்றும் அவரது மகள்கள் அராங் (2), அமீஷா (6) இஷிதா(8) மற்றும் அண்ணன் மகள் அகான்ஷிகா (7).. ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் […]

You May Like