fbpx

”எங்களுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்போறீங்க”..? திமுக – காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு ஆலோசனை..!!

நாளை ஜனவரி 28ஆம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திமுக – காங்கிரஸ் இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநில தேர்தல் ஆணையங்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தேர்தலுக்கான உத்தேச தேதியாக ஏப்ரல் 16ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

இந்தாண்டும், அதேபோல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு, இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே சென்னையில் நாளை முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இம்முறை அதற்கும் குறைவாகவே தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Chella

Next Post

இந்த மருந்தை சாப்பிட்டால் மரணம் நிச்சயம்!… ஷாக் ரிப்போர்ட்!

Sat Jan 27 , 2024
ஃபெண்டானில்(Fentanyl) மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உட்கொண்டால் மரணம் நிச்சயம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த போதைப்பொருளால் அமெரிக்காவில் மட்டும் இதுவரை ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பான அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) அறிக்கையின்படி, ஃபெண்டானில் என்பது ஒரு சிறப்பு வகை செயற்கை ஓபியாய்டு மருந்துகள். இது ஹெராயினை விட 50 மடங்கு வலிமையானது மற்றும் மார்பினை விட 100 மடங்கு […]

You May Like