fbpx

’ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள்’..! வெளியான பரபரப்பு அறிக்கை

கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பற்றி தணிக்கை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின்போது அதிகளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இவற்றில் ஆக்சிஜன் முறையாக கிடைக்காமல் அவற்றின் பற்றாக்குறையும் காணப்பட்டது. இதுபற்றி நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இதுபற்றி சமாஜ்வாடி உறுப்பினரான ராம் கோபால் யாதவ் தலைமையிலான அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா 2-ம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

’ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள்’..! வெளியான பரபரப்பு அறிக்கை

இதனை கவனிக்காமல் அரசு அலட்சியமுடன் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அமைச்சகம், மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி தணிக்கை செய்து கொரோனா உயிரிழப்புகளை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு முன்னெச்சரிக்கையான கொள்கை உருவாக்கமும் செய்வதுடன், சுகாதார அவசரநிலை ஏற்படும் சூழலில் அதனை எதிர்கொள்ளவும் அது உதவும். இதேபோன்று, கொரோனா பாதித்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முறையான இழப்பீடும் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு அரசு முகமைகளிடம் இருந்து அதிகளவில் வெளிப்படை தன்மையும், பொறுப்புணர்வும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

’ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள்’..! வெளியான பரபரப்பு அறிக்கை

ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என கோரி நீண்ட வரிசையில் நோயாளிகளின் குடும்பத்தினர் நின்ற பல்வேறு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்து விட்டது என்றும் ஒரு சில மணிநேரம் மட்டுமே ஆக்சிஜன் விநியோகிக்க முடியும் என்ற சூழலை அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உறுதி செய்யப்பட்ட உயிரிழப்புகள் பற்றி தெரிவிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் முன்பு வேண்டுகோள் விடுத்தது.

’ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள்’..! வெளியான பரபரப்பு அறிக்கை

எனினும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அதற்கு பதிலளித்திருந்தது. எனினும், மாநிலங்களுடன் அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பற்றி தணிக்கை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெண்களே நற்செய்தி... தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

Tue Sep 13 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

You May Like