fbpx

தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை கோடி வாக்காளர்கள்..? தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!!

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் கூறினார்.

தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் 3.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! நவம்பர் மாதத்தின் விடுமுறை லிஸ்ட் வந்துருச்சு..!!

Fri Oct 27 , 2023
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பணபரிமாற்றத்தைத் திட்டமிட்டுக் கொள்ளும்படி ரிசர்வ வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களுக்கான விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், பண்டிகை தின விடுமுறைகள் மாநிலங்களுக்கேற்ப மாறுபடுகிறது. அந்த வகையில், தற்போது […]

You May Like