fbpx

தீபாவளிக்கு இத்தனை நாள் லீவா..? குஷியில் ஊழியர்கள்..!! பிரபல நிறுவனம் சொன்ன காரணம்..?

பண்டிகை நேரத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, மனநலனில் கவனம் செலுத்தும்படி வீவொர்க் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக வீவொர்க் (WeWork) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. இந்த 10 நாள் விடுமுறைகளில் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் எனவும், மனநலனை மேம்படுத்துவதற்கு ஏற்ற செயல்களில் ஈடுபடலாம் எனவும் வீவொர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி திங்கட்கிழமை வருவதால் பெரும்பாலானவர்களுக்கு சனி முதல் திங்கள் வரை 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில், வீவொர்க் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 10 நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு இத்தனை நாள் லீவா..? குஷியில் ஊழியர்கள்..!! பிரபல நிறுவனம் சொன்ன காரணம்..?

இந்த 10 நாட்களும் ஊழியர்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்து, பண்டிகை நேரத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, மனநலனில் கவனம் செலுத்தும்படி வீவொர்க் நிறுவனம் ஊழியர்களை ஊக்கப்படுத்துகிறது. வீவொர்க் நிறுவனம் இதேபோல கடந்த ஆண்டும் விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களின் கடின உழைப்பால்தான் நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் வீவொர்க் நிறுவனத்தின் அதிகாரி பிரீத்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு இத்தனை நாள் லீவா..? குஷியில் ஊழியர்கள்..!! பிரபல நிறுவனம் சொன்ன காரணம்..?

இதேபோல, ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மீஷோவும் (Meesho) தனது ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிறுவனமும் ஊழியர்கள் ஓய்வு எடுத்து மனநலனில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Chella

Next Post

உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது...! மத்திய அரசு விளக்கம்...!

Tue Oct 18 , 2022
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான உணவளிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1-ம் தேதி நிலவரப்படி, 227 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மத்திய அரசின் தொகுப்பில் கையிருப்பில் உள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இந்த உணவு தானியங்களின் கையிருப்பு குறித்து […]
ரேஷன்

You May Like