fbpx

அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 11 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு தொடங்கிய நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சிறுமியை பலாத்காரம் செய்த எம்.எல்.ஏ..!! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

Wed Dec 13 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த சிறுமியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் ராம்துலார் கோண்ட் மீது போக்சோ சட்டம் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. மேலும், இந்த பாலியல் வன்கொடுமை நடைபெறும்போது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றிபெற்று அவர் […]

You May Like