தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் பாதிப்பால் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 13ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை என்பதை பள்ளிக்கல்வித்துறை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில், விடுமுறை தினத்தில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், ஜனவரி 2ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.