fbpx

தீபாவளிக்கு எத்தனை மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும்… புதிய அறிவிப்பு…

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி எத்தனை மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கானஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாடை , பட்டாசுகள் என கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். சிறுவர்கள் , இளைஞர்கள் உள்ளிட்டோர் பட்டாசு வெடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பட்டாசுகள் வெடிக்க கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளிப்பண்டிகை அன்று காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது. தற்போதும் அதே விதிமுறைப்படி காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறைந்த ஒலியுடன் குறைந்த காற்று மாசு ஏற்படுத்தக் கூடிய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் திறந்த வெளியில் பொதுமக்கள் ஒன்றுகூடி பட்டாசுகளை வெடிக்கலாம். தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களில் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Next Post

பிக்பாஸில் இந்த பிரபலம் இருக்கவே கூடாது… மகளிர் ஆணையம் அனுப்பிய பரபரப்பு கடிதம்…

Mon Oct 10 , 2022
பிக்பாஸில் இந்த சினிமா பிரபலம் இருக்க கூடாது, உடனடியாக அவரை வெளியேற்றுங்கள் என மகளிர் ஆணையத் தலைவி அனுப்பி கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதே போல , இந்தியில் சல்மான் கான் பிக்பாஸ் சீசன் 16ஐ தொகுத்து வழங்குகின்றார். இது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகின்றது. கடந்த வாரம்அக்டோபர் 1ம் தேதி 14 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியுள்ளது. […]

You May Like